மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம்

மேல்மலையனூர்: மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆவனி அமாவாசையையொட்டி நேற்றிரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. தாய் மூகாம்பிகை அலங்காரத்தில் ஊஞ்சலில் அமர்ந்து அம்மன் சிறப்பு  காட்சியளித்தார். கோயில் உட்பிரகாரத்தில் பக்தர்கள் யாரும் இன்றி எளிய முறையில் கோயில் பூசாரிகள் அம்மனை ஊஞ்சலில் அமர வைத்து தாலாட்டு பாடல்களை பாடி வழிபட்டனர்.

கொரோனா பரவலை தடுக்க பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் அதையும் மீறி பக்தர்கள் அதிகளவில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ராமு, மேலாளர் மணி அலுவலக ஊழியர் சதீஷ்,கலைமணி மற்றும் திருக்கோயில் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.

Related Stories: