தாழக்குடி, ஆரல்வாய்மொழியில் வ.உ.சி. சிலைக்கு மரியாதை

ஆரல்வாய்மொழி :கப்பலோட்டிய  தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 150வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு  தாழக்குடி மற்றும் ஆரல்வாய்மொழியில் அவருடைய சிலைக்கு அரசியல்  கட்சி பிரமுகர்கள் மற்றும் சமுதாய அமைப்பை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினர்.  திமுக சார்பில் ஆரல்வாய்மொழி, வடக்கூர்  மற்றும் தாழக்குடி பகுதியிலுள்ள வ.உ. சிதம்பரனார் உருவச்சிலைக்கு மாலை  அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திமுக ஒன்றிய செயலாளரும், தோவாளை  ஊராட்சி தலைவருமான நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். ஆரல்வாய்மொழி பேரூர்  செயலாளர் சுப்பிரமணியம், நெசவாளர் அணி துணை அமைப்பாளர் மகராஜபிள்ளை, ஒன்றிய  பிரதிநிதி தாணுபிள்ளை முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக  தி.மு.க. மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் கலந்து கொண்டு வ.உ. சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு  இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட பிரதிநிதி தாணுபிள்ளை, செல்வம், வழக்கறிஞர்  பிரிவை ேசர்ந்த பழனி, சேதுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.அதிமுக  சார்பில்   கிழக்கு மாவட்ட செயலாளரும், மாவட்ட ஆவின் தலைவருமான  எஸ்.ஏ.அசோகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அமைப்பு  செயலாளர் பச்சைமால், ஒன்றிய செயலாளர்கள் மகாராஜன், பொன்சுந்தர்நாத், தொழிலதிபர் முத்துக்குமார் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.

இதுபோல ஆரல்வாய்மொழியிலும் மாலை அணிவித்து  மரியாதை செய்யப்பட்டது. ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன்,  துணைத்தலைவர் ஷேக், வழக்கறிஞர் பிரிவை ேசர்ந்த சுந்தரம், ஜெயகோபால், மாவட்ட  பிரதிநிதி கிருஷ்ணன், தாழக்குடி கூட்டுறவு சங்க தலைவர் பிரம்மநாயகம்,  தாழக்குடி பேரூர் செயலாளர் அய்யப்பன், முத்துசுவாமி உட்பட நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.ஆரல்வாய்மொழியில்  வஉசி சிலைக்கு பாஜ சார்பில் மாவட்ட தலைவர் தர்மராஜ், கம்யூனிஸ்ட் சார்பில்  மாவட்டத்தலைவர் இசக்கிமுத்து ஆகியோர் மாலை அணிவித்தனர்.

நாகர்கோவில்:தாழக்குடி மற்றும் ஆரல்வாய்மொழியில் உள்ள வஉசி சிலைக்கு விஜய் வசந்த் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் அந்தோணிமுத்து, தங்கம் நடேசன், காலபெருமாள், முருகானந்தம், செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாகர்கோவிலில் பா.ஜ சார்பில் கோட்டார் சந்திப்பில் வ.உ.சி. படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மண்டல் தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தேவ், நாஞ்சில் ராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: