நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, இங்கிலாந்து வீராங்கனை எம்மா ரடுகானு (18 வயது) தகுதி பெற்றார். 3வது சுற்றில் ஸ்பெயினின் சாரா டார்மோவுடன் மோதிய ரடுகானு, அதிரடியாக விளையாடி 6-0, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 10 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. ஆஷ்லி அதிர்ச்சி: மற்றொரு 3வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்டி (ஆஸி.) 2-6, 6-1, 6-7 (5-7) என்ற செட் கணக்கில் ஷெல்பி ரோஜர்சிடம் (அமெரிக்கா) அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.