திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்: அமைச்சர், எம்எல்ஏக்கள் பங்கேற்பு

திருத்தணி: திருத்தணியில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் தினத்தையொட்டி நேற்று நடைபெற்ற விழாவில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன், எம்எல்ஏக்கள் சந்திரன், வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி, திருவள்ளூர் முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், திருத்தணி மாவட்ட கல்வி அலுவலர் முனிசுப்ராயன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பேசியதாவது, `டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் திருத்தணியில் பிறந்தவர். இதனால் நம் மாவட்டத்திற்கு ஒரு தனி சிறப்பு உண்டு. அவர் பிறந்த திருத்தணியில் தொடக்கப்பள்ளியில் தொடங்கி மைசூர் கல்கத்தா போன்ற பல்கலைக்கழகங்களில் தத்துவ பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். ஆந்திரா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகவும், யுனஸ்கோ தூதுவராகவும் பணியாற்றியுள்ளார். துணை குடியரசு தலைவர், குடியரசு தலைவராகவும் உயர்ந்து பணியாற்றியதுடன் பாரத ரத்னா போன்ற உயரிய பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

அவர் பிறந்த நாளில் மாணவர்களுக்கு கலங்கரை விளக்காகவும் இருந்து மாணவர்களை வழி நடத்திச் செல்லும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,’ இவ்வாறு பேசினார். விழாவில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பூபதி, நகர பொறுப்பாளர் வினோத்குமார், ஒன்றிய பொறுப்பாளர்கள் ஆர்த்தி, ரவி, கிருஷ்ணன், வழக்கறிஞர் சீனிவாசன், பழனி, சண்முகம், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் அகூர் மாணிக்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: