ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருப்பாற்கடல் குளம், நகராட்சி அலுவலகம் அருகே உள்ளது. இக்குளத்தை சுற்றி ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இருந்தன. இவற்றை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. உதவி ஆணையர் கணேசன், நிர்வாக அதிகாரி இளங்கோவன், வைத்தியநாத சுவாமி கோயில் நிர்வாக அதிகாரி ஜவஹர், பெரிய மாரியம்மன் கோயில் நிர்வாக அதிகாரி கலாராணி மற்றும் கோயில் ஊழியர்கள் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. திருப்பாற்கடல் குளத்தை சுற்றியுள்ள 3 கட்டிடங்கள் மற்றும் சில ஆக்கிரமிப்புகள் இடிக்கப்பட்டன.

இதுகுறித்து நிர்வாக அதிகாரி இளங்கோவனிடம் கேட்டபோது, `` நீதிமன்ற உத்தரவுபடி அரசு வழிகாட்டுதலின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. அந்தவகையில் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருப்பாற்கடல் குளத்தை சுற்றியிருந்த ஆக்கிரமிப்புகள் அப்புறப்படுத்தப்பட்டன என தெரிவித்தார். ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டதை முன்னிட்டு நகர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

Related Stories: