கொரோனா காலத்திலும் இந்தியா-ரஷ்யா நட்புறவு நீடித்தது: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் நடந்த 6வது கிழக்கு பொருளாதார அமைப்பு கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி பேசுகையில், ‘‘இந்தியாவில் திறமை, அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பு கிடைக்கிறது. கிழக்கு ரஷ்யாவில் இயற்கை வளங்கள் நிரம்பி கிடக்கின்றன. எனவே கிழக்கு ரஷ்யாவின் முன்னேற்றத்தில் பங்களிக்க இந்தியர்களின் திறமைக்கு மிகப் பெரிய வாய்ப்புள்ளது.  ககன்யான் திட்டப் பணிகளின் மூலம் விண்வெளி துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன. க கொரோனா கால கட்டத்திலும் கூட இந்தியா, ரஷ்யா இடையிலான நட்புறவு நீண்ட காலமாக தொடர்ந்து நீடித்து வருகிறது’’ என்றார்.

Related Stories: