நீலகிரி மாவட்ட டாஸ்மாக்கில் தடுப்பூசி செலுத்திய சான்று இருந்தால் மட்டுமே சரக்கு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தற்போது நாள் ஒன்றுக்கு 25 முதல் 30 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது. இந்நிலையில், பாதிப்பை குறைக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகம் சேராமல் இருக்க புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொரோனா தடுப்பூசி இரண்டு செலுத்தியவர்கள், அதற்கான சான்றிதழ் காண்பித்தால் மட்டுமே மது வகைகள் வழங்கப்படும். இதற்கான உத்தரவு டாஸ்மாக் மேலாளர் மூலம் அனைத்து மதுக்கடைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் கடைகளுக்கு மது வாங்க வருபவர்கள் இரண்டு தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது 100 சதவீத மக்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என எடுக்கப்பட்ட நடவடிக்கை. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: