மாற்றுத்திறனாளிகளுக்கான 1,095 காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது மணப்பாறை தொகுதி உறுப்பினர் ப.அப்துல் சமது (மமக) கேள்விக்கு, பதில் அளித்து அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், ‘‘மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டத்தின்படி தமிழ்நாட்டில் அனைத்து அரசு துறைகள், குழுமங்கள், வாரியங்கள், அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீட்டு அடிப்படையில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த இட ஒதுக்கீட்ைட நடைமுறைப்படுத்தும் விதமாக ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பதவியிடங்கள் அனைத்தும் மாற்றுத்திறனானிகளுக்கு பணிபுரிய உகந்த பணியிடங்களாக கண்டறியப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது. ‘ஏ’, ‘பி’ பணியிடங்களை பொறுத்தவரையில் 559 பதவியிடங்கள் மாற்றுத்திறனாளிகள் பணிபுரிய உகந்த பணியிடங்களாக கண்டறியப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது. தற்போது, 1,095 காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  

Related Stories: