4 மாதங்களுக்கு பின் ஈரோடு கால்நடை சந்தை மீண்டும் தொடங்கியது!: தடுப்பூசி, தொற்று நெகட்டிவ் சான்றுடன் வந்தோருக்கு மட்டுமே அனுமதி..!!

ஈரோடு: ஈரோடு அருகே கருங்கல்பாளையத்தில் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த மாட்டு சந்தை நான்கரை மாதங்களுக்கு பின்பு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா 2ம் அலை பரவலால் கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் அனைத்து கால்நடை சந்தைகளும் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது ஈரோட்டில் தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து கால்நடை சந்தைகளை திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியிருக்கிறது.

இதனையடுத்து கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் இயங்கி வந்த மாட்டு சந்தை இன்று மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் வழக்கத்தை விட குறைவான அளவிலேயே வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட வியாபாரிகளும், உள்ளூர் விவசாயிகளும் வந்ததால் வணிகம் மந்த கதியில் நடைபெறுகிறது. மாட்டு சந்தைக்கு வந்த வெளிமாநில வியாபாரிகளில் தடுப்பூசி செலுத்தியவர்கள் அல்லது தொற்று இல்லை என சான்றுடன் வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும் விற்பனைக்காக குறைந்த அளவிலேயே மாடுகள் வந்ததால் உள்ளூர் வணிகர்ளும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Related Stories: