ஜாலியன்வாலாபாக் நினைவிடம் சீரமைப்பது தியாகிகளுக்கு அவமதிப்பு: ராகுல் கடும் சாடல்

புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜாலியன்வாலா பாக்கில் நினைவிடம், ஒன்றிய அரசின் நடவடிக்கையால் பல்வேறு அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.  துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தத்ரூபமாக 3 டி.யில் காட்டும் ஒளி, ஒலி காட்சிகள், ஜாலியன்வாலா பாக் போராட்டத்தின் வரலாற்றை சித்தரிக்கும் அருங்காட்சியகங்கள் போன்றவை புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை கடந்த சனிக்கிழமை பிரதமர் மோடி காணொலி மூலமாக திறந்து வைத்தார். இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘ஜாலியன்வாலா பாக் நினைவிடத்தை அரசு சீரமைப்பது தியாகிகளுக்கு அவமதிப்பு. தியாகத்தின் அர்த்தம் தெரியாத ஒருவரால் மட்டுமே இத்தகைய அவமானத்தை ஏற்படுத்த முடியும். நான் ஒரு தியாகியின் மகன். தியாகிகளை அவமதிப்பதை சகித்துக் கொள்ள மாட்டேன்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: