உரிமம் இல்லாத கல்குவாரிகள் இயங்க அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க திருப்பூர் ஆட்சியருக்கு உத்தரவு

திருப்பூர்: உரிமம் இல்லாத கல்குவாரிகள் இயங்க அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க திருப்பூர் ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திருப்பூரில் 64 குவாரிகள் உரிமம் இன்றியும், உரிமத்துடன் 18 குவாரிகளை இயங்குவதாக உயர்நீதிமன்றத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அரசுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய உரிமம் இல்லாமல் இயங்கிய 64 குவாரிகளை மூட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனுமதியின்றி கல்குவாரிகள் செயல்பட அனுமதித்த வி.ஏ.ஓ., டி.ஆர்.ஓ மற்றும் ஆர்.டி.ஓ மீது நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய அதிகாரிகளிடம் இருந்து வருவாய் இழப்பை வசூலிக்கவும் ஐகோர்ட் நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார். உரிமம் இன்றி கல்குவாரிகள் இயங்க அனுமதி அளித்தது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: