டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதல்; 2-வது முறையாக பதக்கம் வென்று சாதனை: வௌ்ளிப்பதக்கம் வென்றார் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன்

டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்தியாவின் மாரியப்பன் வெள்ளிப் பதக்கம் வென்றார். டி-42 பிரிவில் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் வென்றார். பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மாரியப்பன் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அமெரிக்க வீரர் கிரீவ் சாமுடன் கடும் போட்டி நிலவிய நிலையில் வெள்ளிப் பதக்கம் மாரியப்பன் வென்றார். இந்தியாவின் மற்றொரு வீரர் ஷரத்குமார் 1.83 மீட்டர் உயரம் தாண்டு வெண்கலப் பதக்கம் வென்றார். ஜப்பன் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகினறன.

இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் 2 தங்கம், 5 வௌ்ளி உள்பட 10 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். கடந்த 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்க பதக்கம் வென்று சாதனை புரிந்தார். இதேபோல் இந்திய வீரர் வருண் சிங் வெங்கல பதக்கம் வென்று அசத்தினார். தனது போராட்ட குணத்தின் மூலம் பாராலிங்பிக்கில் வெள்ளி வென்றுள்ளார் மாரியப்பன் என தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பாராட்டினார். டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு எனது வாழ்த்துக்கள் என கூறினார். அடுத்த பாராலிமபிக்கில் மாரியப்பன் பஙங்கேற்க தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என கூறினார்.

பதக்கம் வென்ற 2 வீரர்களுக்கும் மோடி வாழ்த்து:

மாரியப்பன் தங்கவேலு நிலைத்தன்மை மற்றும் சிறப்பிற்கு ஒத்ததாகும். வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துக்கள். அவரது சாதனையால் இந்தியா பெருமை கொள்கிறது என பிரதமர் மோடி தனது ட்வீட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் ஒவ்வொரு இந்தியரின் முகத்திலும் ஷரத்குமார் அடங்காதவர் புன்னகையை கொண்டு வந்தார். அவரது வாழ்க்கை பயணம் பலரை ஊக்குவிக்கும். அவருக்கு வாழ்த்துக்கள் என மோடி புகழாரம் செய்துள்ளார்.

Related Stories: