கொள்ளிடம் ரயில் நிலையத்தில் பூட்டியே கிடக்கும் நவீன கழிப்பறை-பயன்பாட்டுக்கு திறக்க பயணிகள் வலியுறுத்தல்

கொள்ளிடம் : கொள்ளிடம் ரயில் நிலையத்தில் என்எல்சி சார்பில் கட்டப்பட்டுள்ள நவீன கழிவறையை திறக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் ரயில்நிலையம் உள்ளது. இங்கு சென்னையிலிருந்து சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் திருச்சி மார்க்கமாக செல்லும் பாசஞ்சர் ரயில்கள் நின்று செல்லும். இங்கு பயணிகள் அவ்வப்போது ரயிலுக்கு பயணச் சீட்டு பெற்றுக்கொண்டு காத்திருக்கும் நபர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ரயில் நிலையத்திற்கு சொந்தமான இடத்தில் ரயில் நிலைய வளாகத்தில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சார்பில் நவீன வசதிகளுடன் கூடிய பொதுகழிவறை கட்டப்பட்டுள்ளது.இதில் குளியலறை மற்றும் கழிவறைகள் உள்ளன. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக வசதி செய்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உரிய வசதி செய்து தரப்பட்டுள்ளது. கழிப்பறை கட்டப்பட்டு சுமார் 4 மாதங்களுக்கு மேலாகியும், இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. இந்த கழிவறையை திறந்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டுமென்று பயணிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: