வால்பாறையில் தொடர் மழை நீரில் மூழ்கிய தேயிலை தோட்டங்கள்

வால்பாறை :  வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக  சாரல் மழை பெய்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் பெய்துவரும் மழையால் சோலையார் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. கடந்த 2 நாட்களில் 2 அடி உயர்ந்து உள்ளது. சாரல் மழையால் கடும் குளிர்  தொடர்ந்து நீடிக்கிறது. மேலும்  ஆறுகள், சிற்றோடைகள், அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில்  சோலையார் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

சேடல் பகுதியில் வழிந்து பரம்பிக்குளம் அணைக்கு நீர் செல்கிறது. நேற்று காலை நிலவரப்படி 165 அடி உயரம் உள்ள அணையில் 162.14 அடி நீர் மட்டம் உள்ளது. அணையில் இருந்து சேடல் மற்றும் மின்நிலையம் இயக்கப்பட்டு  வினாடிக்கு 2000 கன அடி நீர் பரம்பிக்குளம் அணைக்கு செல்கிறது.  நேற்று காலை நிலவரப்படி சோலையார் அணைக்கு வினாடிக்கு 2600 கன அடி நீர் வரத்து உள்ளது. மழை நிலவரம் சின்னக்கல்லாறு (மேல்நீராறு) 44 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சோலையார் அணை 34, வால்பாறை 41, லோயர் நீராறு 22 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Related Stories: