கிராமங்களில் விளையாட்டு போட்டி நடத்த வேண்டும்: மன் கீ பாத்தில் மோடி பேச்சு

புதுடெல்லி: பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று, ‘மன் கீ பாத்’ எனப்படும் ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். ஆகஸ்ட் மாத கடைசி ஞாயிறான நேற்று, அவர் ஆற்றிய உரையில் கூறியதாவது: இளம் தலைமுறையின் மனநிலை ஒரு பெரிய மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. புதிய பாதைகள் மற்றும் புதிய ஆர்வங்கள் மூலமாக இப்போது புதிய இலக்குகளில் ஆர்வமாக இருக்கின்றனர். கிராமப்புறங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். நம்மால் முடிந்த பங்களிப்பை வழங்கி, நம்மால் முடிந்தவரை இதற்கான வேகத்தை அதிகரிக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம். அனைவரின் முயற்சி என்பதை யதார்த்தமாக மாற்றுவோம்.

ஆன்மிக மரபுகள் மற்றும் தத்துவங்களில் உலகம் கவனம் செலுத்தி வருகிறது. சிறந்த மரபுகளை முன்னெடுத்து செல்ல வேண்டிய பொறுப்பு மக்களிடம் இருக்கிறது. தற்காலிகமான மற்றும் அழிந்து போவதை விட்டுவிட வேண்டும். ஆனால், காலவரம்பற்றதை முன்னோக்கி எடுத்து செல்ல வேண்டும். பண்டிகைகளை கொண்டாடுவோம். அவற்றின் அறிவியல் உண்மைகள் மற்றும் அவற்றின் பின் உள்ள பொருளை புரிந்து கொள்வோம். ஒவ்ெவாரு கொண்டாட்டத்திலும் ஒரு அடிப்படை செய்தி இருக்கிறது. திங்களன்று வரும் ஜன்மாஷ்டமிக்காக மக்களுக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: