நாளை ஜெயந்தி விழா கொண்டாட்டம்: பல்வேறு வடிவ கிருஷ்ணர் சிலைகள் விற்பனை மும்முரம்

கரூர்: கரூரில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. இந்துக்களால் கொண்டாடப்படும் முக்கிய நிகழ்வுகளில் கிருஷ்ணஜெயந்தி ஒன்றாகும். ஆவணி மாதம் தேய் பிறையின் எட்டாம் நாளான நாளை(30ம் தேதி) ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் கிருஷ்ண ஜெயந்தி விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு இந்துக்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் பல வண்ணங்களில் கிருஷ்ணர் சிலை, படங்களை அலங்கரித்தும் கிருஷ்ணர் விரும்பி உண்ணும் நெய்யையும் படையல் படைத்து வழிபடுகின்றனர். இதையொட்டி கரூர் நகரின் முக்கிய பகுதிகளான பஸ் நிலையம், கோவை ரோடு, சுங்க கேட் கார்னர், திருமாநிலையூர், தாந்தோணி மலை, காந்திகிராமம் ஆகிய பகுதிகளில் பல்வேறு வடிவ கிருஷ்ணர் சிலைகள் ரூபாய் 50 முதல் 600 வரை வெவ்வேறு டிசைன்களில் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்களும் தங்களுக்கு பிடித்த சிலைகளை தேர்வு செய்து வீட்டில் வைத்து வழிபட வாங்கி செல்கின்றனர்.

Related Stories: