தரங்கம்பாடி அருகே உதவித்தொகையை உயர்த்தி கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்கிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தரங்கம்பாடி வட்டம், காட்டுச்சேரி, இலுப்பூர் பகுதிகளில் கிராம நிர்வாக அலுவகம் முன் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்தி வழங்கிட கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காட்டுச்சேரியில் ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒன்றிய தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். கட்டுமான சங்க மாவட்ட துணைத்தலைவர் குணசேகரன் கலந்துக் கொண்டு உரையாற்றினார். இலுப்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்க ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் ஒன்றிய பொருளாளர் ஆனந்தராஜ், துணைத் தலைவர் லெட்சுமி, துணை செயலாளர் ராஜேந்திரன் மற்றும் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாற்றுதிறனாளிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: