காஞ்சிபுரம் சோழன் மெட்ரிக் பள்ளியில் உயர்ரக தொழில்நுட்ப அறிவியல் ஆய்வுக்கூடம்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திறந்து வைத்தார்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம்  சோழன் மெட்ரிக் பள்ளியில், உயர்ரக தொழில் நுட்ப அறிவியல் ஆய்வக் கூடத்தை, மாவட்ட முதன்மைக் கல்வி திறந்து வைத்தார். காஞ்சிபுரம் ஏகாம்பரபுரம் தெருவில் சோழன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில், இந்திய அரசின் நிதி ஆயுத் மூலம் அடல் டிங்கரிங் என்ற உயர்ரக தொழில்நுட்ப அறிவியல் ஆய்வக் கூடம் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடந்தது. பள்ளி தாளாளர் சஞ்சீவி ஜெயராம் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஞானப்பண்டிதர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் கலந்து கொண்டு, தொழில்நுட்ப அறிவியல் ஆய்வுக் கூடத்தை திறந்து வைத்தார்.

இதையடுத்து, அங்கு அமைக்கப்பட்டு இருந்த பள்ளி மாணவர்களின் தொழில்நுட்ப அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டு, மாணவர்களை வெகுவாக பாராட்டினார்  தொடா்ந்து பள்ளி வளாகத்தில் நடந்த அறிவியல் தொடர்பான கருத்தரங்கு கூட்டத்தில் திருச்சி பாரதிதாசன் பல்கலை பேராசிரியர் ராம் கணேஷ், ஆசிரியர்களுக்கு உயர் தொழில்நுட்ப அறிவியல் பயிற்சியை வழங்கினார். மேலும் பாரதிதாசன் பல்கலை உதவிப்பேராசிரியர் அமுதா, ஆசிரியர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் துணை முதல்வர் தயாளன், ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: