மணப்பாக்கம் மியாட் சர்வதேச மருத்துவமனையில் 3டி தொழில்நுட்ப மென்பொருள் ஸ்கேன் இயந்திரம்: துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: மணப்பாக்கம் மியாட் சர்வதேச மருத்துவமனையில் 3 டி தொழில்நுட்பம் கொண்ட மென்பொருள் ஸ்கேன் இயந்திரம் துர்கா ஸ்டாலின் இயக்கிவைத்தார். இந்தியாவிலேயே முதன்முறையாக 18 சாப்ட்வேர் நுண்ணறிவின் உதவியோடு கோன் பீம்சிடி, 3 டி எக்கோ மிஷினுடன் கூடிய பைப்னேன் கேத் லேப் என்னும் 10 கோடி மதிப்பான சாப்ட்வேர் மிஷினை மியாட் மருத்துவமனை தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது.  இந்த மிஷினின் சேவை நேற்று மருத்துவமனையில் தொடக்கப்பட்டது. தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்துகொண்டு குத்துவிளக்கினை ஏற்றி தொடங்கி வைத்தார்.

முன்னதாக மருத்துவமனையின் தலைவர் மல்லிகா மோகன்தாஸ், நிர்வாக இயக்குனர் பிரித்வி மோகன்தாஸ் ஆகியோர் துர்கா ஸ்டானை பூங்கொத்து, சால்வை அணிவித்து வாவேற்றனர்.  மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிருத்வி மோகன் தாஸ் கூறுகையில், ‘‘நோயாளிகளுக்கு சிகிச்சையின்போது தாமதம் ஏற்படுவதை தவிர்க்கும்விதமாக சிடி ஸ்கேன், எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் போன்ற சோதனைகளை ஒரே இடத்தில் துல்லியமாக தெளிவாக படம் எடுக்க இக் கருவி உதவுகிறது. இதனால் அடிக்கடி எக்ஸ்ரே எடுப்பது தவிர்க்கப்பட்டு நோயாளிகளுக்கு கதிர்வீச்சு பாதிப்பு குறைகிறது.

இதயம், சிறுநீரகம், நரம்பு, ரத்த நாளங்கள் பாதிப்பு போன்றவை தெளிவாக தெரிவதால் எளிதில் சிகிச்சை அளிக்க இந்த மிஷின் உதவுகிறது. கடந்த ஆண்டு வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவருக்கு இந்த மிஷின் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைத்தார்’’ என்றார் .

டாக்டர்கள் ஜெய்சங்கர், சங்கர் பாலகிருஷ்ணன், கார்த்திக் தாமோதரன் ஆகியோரும் இந்த இயந்திரம் குறித்து விளக்கிப் பேசினர்.

Related Stories: