ஆர்எஸ்எஸ் விவசாய சங்கம் குற்றச்சாட்டு வாஜ்பாயும், மோடியும் ஒன்றும் செய்யவில்லை: செப்.8ல் நாடு தழுவிய போராட்டம்

பள்ளியா: ஆர்எஸ்எஸ் அமைப்பின் பாரதிய கிசான் சங்கம், செப்டம்பர் 8ம் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக எச்சரித்துள்ளது. இது குறித்து சங்கத்தின் பொருளாளர் யுகல் கிஷோர் மிஸ்ரா கூறியதாவது: குறைந்தபட்ச ஆதார விலையில் விவசாயிகளின் விளை பொருள்கள் கொள்முதல் செய்யப்படுவதை வகை செய்யும் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். இதற்காக மோடி அரசுக்கு ஆகஸ்ட் 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கிறோம். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்த மாதம் 8ம் தேதி முதல் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும்.

விவசாயிகளுக்கு தங்கள் உற்பத்தி செலவுக்கான போதிய விலை கிடைப்பதில்லை. குறைந்தபட்ச ஆதார விலை போதுமானதாக இல்லை. மோடி அரசை ஆர்எஸ்எஸ் வழி நடத்தவில்லை. இல்லையென்றால், நாங்கள் ஏன் போராட்டம் நடத்தப் போகிறோம். அடல் அரசோ, மோடி அரசோ விவசாயிகளின் உற்பத்திக்கு போதிய விலை கொடுப்பதை பற்றி ஆலோசிக்கவில்லை. எந்த அரசும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: