அசாம், மிசோரம் அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

கவுகாத்தி:  கடந்த ஜூலை 26ம் தேதி வடகிழக்கு மாநிலங்களான அசாம் -மிசோரம் எல்லையில் ஏற்பட்ட மோதலில் அசாமை  சேர்ந்த 6 போலீசார் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன் காரணமாக எல்லையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. ஒன்றிய அரசின் தலையீட்டை தொடர்ந்து பதற்றம்  தணிந்தது. இந்நிலையில் மனித உரிமைகள்  மீறப்பட்டுள்ளதாக தேசிய மனித உரிமை ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமை ஆணையம்  ஒன்றிய அரசு, அசாம், மிசோரம் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Related Stories: