புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பு ஐஐடி குழுவை ஆய்வு செய்ய விரைவில் அனுப்ப வேண்டும்: அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை

சென்னை: புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் தங்கள் குறைகளை கேட்டறிந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று மதியம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு நேரில் வந்து அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, `புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் தரத்தோடு இல்லை.

ஆபத்தான நிலையில் உள்ளது என்ற செய்தி கடந்த இரண்டு வாரங்களாக வந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து சட்டமன்றத்திலும் பேசப்பட்டு இருக்கிறது. தமிழக அரசு ஐஐடி வல்லுனர்கள் குழுவை அமைத்து கட்டிடத்தை தன்மையை ஆய்வு செய்ய அறிவித்திருக்கிறது. 4 நாட்களில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி மற்றும் மின்தூக்கி வசதியை சரி செய்து விடுவோம். முகலிவாக்கத்தில் கட்டிடம் இடிந்து விழுந்த பீதி மக்களிடத்தில் இன்னும் இருப்பதை நம்மால் அறிய முடிகிறது. எனவே ஐஐடி வல்லுனர் குழுவை ஆய்வு செய்ய விரைந்து அனுப்ப வேண்டும் என்றார்.

Related Stories: