ஸ்கேன், இசிஜி உள்ளிட்ட வசதிகளுடன் நெல்லை மாவட்டத்தில் 2 ஆரம்ப சுகாதார நிலையங்கள் சீரமைப்பு

நெல்லை: நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் மற்றும் பர்கிட்மாநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் நவீன மருத்துவ கருவி வசதிகளுடன் சீரமைக்கப்பட்டுள்ளது. பழுதான கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டதுடன் ஸ்கேன், இசிஜி கருவிகள் கம்ப்யூட்டர் வசதிகள், ஆய்வகம், குழந்தைபேறுக்கான சிகிச்சை கருவிகள் உள்ளிட்டவைகள் ரூ.1.8கோடி மதிப்பில் கங்கைகொண்டானில் உள்ள போஜ் நிறுவன உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது. சீரமைக்கப்பட்ட கட்டிடங்களை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு துவக்கிவைத்தார்.

சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கிருஷ்ணலீலா, மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலர் முத்துராமலிங்கம், வட்டார மருத்துவ அலுவலர் ஜஸ்டின் மற்றும் போஜ் அலுவலர்கள் முரணி, பிரசாத் பாரீக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேம்படுத்தப்பட்ட இந்த ஆரம்பசுகாதாரநிலையங்களை பொதுமக்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும் என  சுகாதாரத்துறை வேண்டுகோள்விடுத்துள்ளது.

Related Stories: