அறுவடை நடந்து வரும் நிலையில் சம்பா பயிர்களுக்கான காப்பீடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும்..! அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

சென்னை: சம்பா உள்ளிட்ட பிற பயிர்களுக்கான காப்பீடு வழக்கம்போல் தொடரும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சம்பா பயிர்களுக்கான காப்பீடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விவசாயிகளை ஓரளவாவது காக்கும் நோக்கத்துடன் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. உழவர்களின் நலன் காப்பதற்கான இத்திட்டம் வரவேற்கத் தக்கது என்றாலும் கூட, குறுவை பருவ நெற்பயிர் இத்திட்டத்தில் சேர்க்கப்படாதது ஏமாற்றமளிப்பதாக பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருந்தார்.

மேலும் நெல்லுக்கு ரத்து செய்திருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என்றும், இது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என்றும் விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “அரசு மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக நெற்பயிருக்கான காப்பீடு குறித்து அவதூறு பரப்புகிறார்கள். சம்பா உள்ளிட்ட பிற பயிர்களுக்கான காப்பீடு வழக்கம்போல் தொடரும். அறுவடை நடந்துவரும் நிலையில் சம்பா பயிர்களுக்கான காப்பீடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும்” என்று அவர் கூறினார்.

Related Stories: