டேராடூன்: இந்தியாவின் மிக உயரமான மூலிகைத் தோட்டம், உத்தரகாண்ட் மாநிலத்தில் திறந்து வைக்கப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ளது சமோலி மாவட்டம். இந்தியாவின் கடைசி கிராமமான மணா என்ற பகுதி இங்குதான் அமைந்துள்ளது. இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் உள்ளது. புகழ் பெற்ற பத்ரிநாத் கோயிலும் இதன் அருகில்தான் உள்ளது. இதுபோல், பல்வேறு முக்கியத்துவம் கொண்ட மணாவில் மூலிகைத் தோட்டம் அமைக்க உத்தரகாண்ட் அரசு முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. அதன்படி, ஒன்றிய அரசு நிதி உதவியின் கீழ், இந்த கிராமத்தில் 3 ஏக்கர் நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது மூலிகைத் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.