ஆமைக்குளம் காலனியில் சாலை அமைக்க கோரிக்கை

பந்தலூர்: பந்தலூர் அருகே நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட ஆமைக்குளம் காலனியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அரசு கலை கல்லூரிக்கு செல்லும் மண் சாலையானது மழை காலங்களில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக இருப்பதால் சாலையை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் தெருவிளக்கு, வீடுகளுக்கு மின் இணைப்பு, நடைபாதை, குடிநீர் வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருப்பதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள இப்பகுதிக்கு நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: