வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கள்ளக்குறிச்சி, செஞ்சி, கடலூர், நாமக்கல், விழுப்புரம், தூத்துக்குடி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் வில்லிவாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. தருமபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், முறுக்கேறி ஹனுமந்தை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம், தியாகதுருகம், கச்சராபாளையம், உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, புளியம்பட்டி, பாளையம்பட்டி, ராமசாமிபுரம், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. புதுச்சேரி நகர், மதகடிப்பட்டு, கனகசெட்டிக்குளம், வில்லியனூர், காலாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. சேலம், அரியலூர், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், பெரம்பலூர், ஆத்தூர், மதுராந்தகம், உளுந்தூர்பேட்டை, செஞ்சி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

இதனிடையே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், டெல்டா மாவட்டங்கள், மற்றும் புதுச்சேரி, காரைக்காலின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: