விருதுநகர் ஆயுதப்படை வளாகத்தில் அச்சப்பட வைக்கும் வீடுகள்: இடிந்து விழுவதால் போலீசார் பீதி

விருதுநகர்: விருதுநகர் ஆயுதப்படை குடியிருப்பில், ஆயுதப்படை காவலர்கள், லோக்கல் போலீசார் மற்றும் எஸ்ஐக்களுக்கு என 550க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஒவ்வொரு குடியிருப்பு வளாகத்தில் 12 வீடுகள் உள்ளன. இவற்றில் பெரும்பான்மையான குடியிருப்புகள் 30 ஆண்டுகளுக்கு கட்டப்பட்ட நிலையில், கட்டிடங்களின் சுற்றுச்சுவர்கள், உட்பகுதி சுவர்கள், மேற்கூரைகள், குடிநீர் தொட்டிகள் இடிந்து விழுந்து வருகின்றன.அனைத்து வீடுகளுக்கான மின்வயர்கள் தொங்கிய நிலையில் இருப்பதால் அடிக்கடி மின்கசிவு, விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

குடியிருப்புகளை சுற்றி முட்புதர்கள் மண்டி கிடப்பதால் பாம்புகள், விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. மக்கள் பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாரின் குடியிருப்புகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் தினசரி உயிர்பயத்தில் வசித்து வருகின்றனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், `` போலீஸ் குடியிருப்பில் 550க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தாலும், சுமார் 400க்கும் குறைவான வீடுகளில் மட்டும் குடும்பங்கள் உள்ளன. வீடுகளில் மேற்கூரை, தண்ணீர் டேங்க், சுற்றுசுவர்கள் விரிசல் விழுந்து, தினசரி விழுந்து வருகின்றன. மின்வயர்கள் தொங்கிய நிலையில் இருக்கிறது. பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ளது.வீடுகளை பழுது பார்க்க இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரூ.3 கோடி நிதி கோரப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டதாகவும், அதை வைத்து பழுது பார்க்க முடியாது என்பதால் நிதியை கொண்டு எஸ்பி அலுவலகத்தை மராமத்து செய்து விட்டதாக அலுவலர்கள் கூறுகின்றனர்’’ என்று தெரிவித்தனர்.

Related Stories: