அமெரிக்க நாடாளுமன்றம் அருகே காரை நிறுத்தி வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த நபர்!!

வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றக் கட்டிடம் அருகே காரை நிறுத்தி அதில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார். நாடாளுமன்றக் கட்டிடம் அமைந்துள்ள வாஷிங்டன் டி.சி உயர் பாதுகாப்பு வட்டத்தில் உள்ள கட்டிடம் ஆகும். இங்கு நேற்று காரில் வந்த ஒருவர் காவலர்களை செல்போனில் தொடர்பு கொண்டு தனது வாகனத்தில் வெடிகுண்டு நிரப்பப்பட்டு வெடிக்க தயார் நிலையில் இருப்பதாக கூறினார்.மேலும் முகநூல் பக்கத்திலும் வெடிகுண்டு மிரட்டல் காணொளியை பதிவிட்டு அவர் பரபரப்பை ஏற்படுத்தினார்.

வெடிகுண்டு மிரட்டல் எதிரொலியாக அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பதற்றம் நிலவியது. பாதுகாப்புப் படையினர் உடனடியாக கார் நின்ற பகுதியை சுற்றி வளைத்தனர்.காரில் இருண்தகிய நபருடன் காவல் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.சுமார் 4 மணி நேர பரபரப்பிற்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த நபர் பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்தார். பின்னர் பலத்த பாதுகாப்புடன் அவர் வாகனத்தை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டனர்.இதில் காரில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது கண்டறியப்பட்டது. விசாரணையில் மிரட்டல் விடுத்த நபர், வடக்கு கரோலினா நகரைச் சேர்ந்த பிளாயிடு ரோஸ் பெர்ரி என்பது தெரியவந்தது. சமீபத்தில் அவரது தாயார் மரணம் அடைந்ததால் விரக்தி அடைந்த ரோஸ் பெர்ரி, மனப்பிளவு ஏற்பட்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: