வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகார் மதுரை மாநகராட்சி முதன்மை பொறியாளர் சஸ்பெண்ட்

மதுரை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், மதுரை மாநகராட்சி முதன்மை பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மதுரை மாநகராட்சி மண்டலம் 2ல் முதன்மை பொறியாளராக பணியாற்றி வருபவர் ராஜேந்திரன். இவர் கடந்த 2010 பிப்.1ம் தேதி முதல் 2018 மே 21 வரையில் மாநகராட்சி பணியில் இருக்கும்போது, வருமானத்திற்கு அதிகமாக 96.15 சதவீதம் சொத்து சேர்த்து இருப்பதாக இவர் மீது புகார் எழுந்தது. இதன்பேரில் சமீபத்தில் தமிழக கூடுதல் முதன்மை செயலர், குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து குழு விசாரணை நடத்தியது. இதில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது உண்மை எனத் தெரியவந்தது. இந்நிலையில் முதன்மை பொறியாளர் ராஜேந்திரனை, கூடுதல் தலைமை செயலர் சிவ் தாஸ் மீனா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் அரசு வழங்கும் பயணப்படி உள்ளிட்ட பணப்பலன்களை நிறுத்தி வைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: