ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் மக்கள் ஆசி யாத்திரை: கோவையில் தொடங்கினார்

கோவை: பாஜ சார்பில் கோவையில் மக்கள் ஆசி யாத்திரையை ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் நேற்று துவக்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில்  அடுத்த 3 நாட்கள் இந்த யாத்திரை நடைபெற உள்ளது. திமுக நல்லது செய்தால் ஆதரிப்போம். பெட்ரோல் விலை குறைப்பு என்பதை  திமுக தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தது. அதனை தற்போது  நிறைவேற்றியுள்ளார்கள். ஒன்றிய அரசு கச்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் என்றார். பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜ இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிருபரிடம் பாய்ச்சல்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டியின்போது, கொரோனா 3வது அலை எச்சரிக்கை இருக்கும்போது யாத்திரை போவது சரியா? என ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார். இதனால் ஆக்ரோஷம் அடைந்த எல்.முருகன், ‘‘என்னை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியபோது எதிர்க்கட்சிகள் தடுத்து அமளியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு என்னை பிடிக்கவில்லை. அதேபோல் நான் யாத்திரை போவது உங்களுக்கு பிடிக்கவில்லை, கொரோனா பாதிப்பு குறைந்ததால்தான் யாத்

திரை”  என கோபமாக பதில் அளித்து சென்றார்.

Related Stories: