75வது சுதந்திர தினம் நாளை கொண்டாட்டம் டெல்லி செங்கோட்டையில் பல அடுக்கு பாதுகாப்பு: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இன்று உரை

புதுடெல்லி: நாட்டின் 75வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டை பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை நாளை கொண்டாடுகிறது. இதற்கான ஏற்பாடுகள், கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி செய்யப்பட்டுள்ளது. இதை சீர்குலைக்க தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக உளவுத்தறைகள் எச்சரிக்கை விடுத்து இருப்பதால், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பிரதமர் மோடி கொடியேற்றி உரையாற்றும் செங்கோட்டை பகுதியில், பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  

ஜம்முவில் கடந்த மாதம் விமானப்படை தளத்தின் மீது தீவிரவாதிகள் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தினர். இதனால், டிரோன்களின் நடமாட்டத்தை கண்காணிக்க தனி பாதுகாப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையை சுற்றி 350 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 5 ஆயிரம் பாதுகாப்பு வீரர்கள் அமர்த்தப்பட்டு உள்ளனர். சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு தூர்தர்ஷனிலும், அகில இந்திய வானொலியின் அனைத்து மொழிகளிலும் அவருடைய உரை வெளியாகும்.

Related Stories: