உச்ச நீதிமன்ற நீதிபதி நாரிமன் ஓய்வு வலுவான சிங்கத்தை நீதித்துறை இழக்கிறது: தலைமை நீதிபதி நெகிழ்ச்சி

புதுடெல்லி:  உச்ச நீதிமன்ற நீதிபதி ரோகின்டன் பாலி நாரிமன் 2014ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஓரினச் சேர்க்கை குற்றமாகாது, சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்களை வழங்கியுள்ளார். இந்நிலையில், நீதிபதி நாரிமன் நேற்று ஒய்வு பெற்றார். அவருக்கு நடந்த பிரிவு உபச்சார விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசுகையில், ‘‘நாரிமன் ஓய்வு பெறுவதன் மூலம், இந்திய நீதித்துறையில் இருக்கும் வலுவான சிங்கங்களில் ஒன்றை நாம் இழந்து விட்டதாக உணர்கிறேன். அவர் நீதி அமைப்பின் வலுவான தூண்களில் ஒன்று.  உச்ச நீதிமன்ற அமர்வுக்கு நேரடியாக நியமிக்கப்பட்ட 5வது நீதிபதி,” என்றார்.

Related Stories: