பொற்பனைக்கோட்டை அகழாய்வில் அரிய மண்பாண்டங்கள் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை:புதுக்கோட்டை அருகே அகழாய்வு நடைபெற்று வரும் பொற்பனைக்கோட்டையில் அரிய மண் பாண்டங்கள் கிடைத்துள்ளன.புதுக்கோட்டை அருகே சுமார் 10 கிமீ தொலைவில் வேப்பங்குடி ஊராட்சிக்குள்பட்ட பொற்பனைக்கோட்டையில் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் அகழாய்வுப் பணிகள் கடந்த ஜூலை 30ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது . கோட்டைச் சுற்றுச்சுவரைத் தவிர, புதைந்து போன ஒரே சங்கக் காலக் கோட்டை எனக் கருதப்படும் இப்பகுதியில், பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் இனியன் தலைமையிலான குழுவினர் அகழாய்வில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே இரும்புக்கொக்கி ஒன்று கிடைத்த நிலையில், தற்போது சமையலுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படும் உடைந்த ‘மண்பானைகள்’, குடுவை மூடியில் பொருத்தப்பட்டிருக்கும் மேல்பகுதி, பொழுதுபோக்குக்காக விளையாட்டுக்காகபயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படும் “வட்டச்சில்லு’ ஆகிய பொருட்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன.தற்போதுள்ள தரைப்பரப்பில் இருந்து சுமார் ஒன்றரை அடி ஆழத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் பொருட்களின் படங்கள், ஓரிரு நாட்கள் ஆய்வுக்குப் பிறகு தற்போது வெளியிடப்பட்டுள்ளன. தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கு பெற்றுள்ளனர்.

Related Stories: