கோவை மற்றும் பல்லடத்தை சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு

கோவை: சென்னை மாநகராட்சி மற்றும் கோவை மாநகராட்சிகளில்  811 கோடி ரூபாய் அளவிற்கு மாநகராட்சி ஒப்பந்தத்தில் முறைகேடு ஏற்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து நேற்றைய தினம் சென்னை கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் சில ஒப்பந்ததாரர்கள் என 60க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்சஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. நேற்றைய தினம் கோவையில் நடந்த இந்த சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ள போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் அதிக அளவில் கூடினர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றபோது அதிமுகவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ரகளை செய்தனர். மேலும் அங்கு கூடியிருந்த அதிமுக தொண்டர்களுக்கு 2 வேலை உணவு மற்றும் சிற்றுண்டிகளை வழங்கப்பட்டது.

தொடர்ந்து கொரோனா நோய் தொற்று அட்ச இருக்க கூடிய காரணத்தால் பல்வேறு விதிமுறைகள் அமலில் உள்ள சூழலில் அதிக அளவு கூட்டம் கூடியதாக கோவை வடக்கு எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன்,  மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், கவுண்டபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜே. அருண்குமார், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமல் கந்தசாமி, சிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், மேலும் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி உள்ளிட்ட 10 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்.

மேலும் முன்னாள் எம்.எல்.ஏ.க்களாக இருந்த எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுளள்து. நேற்று போலீசார் இருப்பு தடுப்புகளை வைக்க வந்தபோது போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு, தடுப்புகளை தூக்கி வீசி ரகளை செய்த அதிமுக தொண்டர்கள் 10 பேர்மீது தனியாக அரசு ஊழியர்களை பணிசெய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பாலக்காடு நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டு போக்குவரத்தட்டுக்கு இடையூறு செய்ததாக 2 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். நேற்றையதினம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டபோது கோவையில் திருவிழா போல கூட்டம் கூடிய அதிமுக தொண்டர்கள், எம்.எல்.ஏ.கள், முன்னாள் எம்.எல்.ஏ. என சுமார் 500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுளள்து.

Related Stories: