ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பின் நிலைமை மோசமாகி விட்டது: குப்கர் கூட்டணி கண்டனம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. நேற்று இதன் 2ம் ஆண்டு நிறைவடைந்தது. பாஜ இதை தேசிய கொடி ஏற்றி கொண்டாடியது. எதிர்க்கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தன. ஜம்மு காஷ்மீரை சேர்ந்த குப்கர் கூட்டணியின் செய்தி தொடர்பாளரான தாரிகமி அளித்த பேட்டியில், ‘‘சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீரின் இயல்புநிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது,’’ என்றார். இதனிடையே, சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்த்து பாகிஸ்தானிலும் நேற்று போராட்டங்கள் நடந்தன. இஸ்லாமாபாத்தில் நடந்த பேரணியில் அதிபர் ஆரிப் அல்வி பங்கேற்றார். பிரதமர் மோடி தனது டிவிட்டரில், `ஆகஸ்ட் 5ம் தேதி வரலாற்றில் மறக்க முடியாத நாள். 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. கடந்தாண்டு இதே நாளில் அயோத்தி ராமர் கோயிலின் பூமி பூஜை நடந்தது,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: