ரயில்களில் வை - ஃபை வசதியை ரத்து செய்தது ஒன்றிய அரசு!: செலவு அதிகமாவதால் நடவடிக்கை..!!

டெல்லி: ரயில்களில் வை - ஃபை வசதி திட்டம் ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ரயில்களில் பயணிகளுக்கு இணையதள வசதியை வழங்குவதற்காக கடந்த 2019ம் ஆண்டு ரயில்களில் வை - ஃபை திட்டத்தை அப்போதைய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்தார். அடுத்த 4 ஆண்டுகளில் முக்கிய ரயில்கள் அனைத்திலும் இந்த வசதி ஏற்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி முதல்கட்டமாக ஹவுரா ராஜ்தானே எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. தற்போது இந்த திட்டத்தை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மக்களவையில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இதனை  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலம் பதிலளித்துள்ள அமைச்சர், வை - ஃபை தொழில்நுட்பம் அலைவரிசை கட்டணங்களின் வடிவத்தில் தொடர்ச்சியான செலவுகளை ஏற்படுத்துவதுடன் இதன் செலவும் குறைந்ததாக இல்லை என்று கூறியிருக்கிறார். அத்துடன் பயணிகளுக்கு போதிய அலைவரிசை கிடைப்பதும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த திட்டம் ரத்து செய்யப்படுகிறது என்று ஒன்றிய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>