முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பங்கேற்று திரும்பிய வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி

சென்னை: டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பங்கேற்று திரும்பிய வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி தற்போது முதலமைச்சரை சந்தித்தார். இந்தியாவில் இருந்து முதன் முறையாக வாள்வீச்சு ஒலிம்பிக்கில் பங்கேற்றது தனக்கும், தமிழ்நாடு மற்றும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக இருந்தது. இதற்க்கு தனது குடும்பத்தினர் மிகவும் உதவியுள்ளதாக அவர் தெரிவித்தார். இதனை கூறி பவானி தேவியின் தாயாரை முதல்வர் பாராட்டியதாக அவர் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தனது வாளினை பரிசாக அளித்ததாக பவானி தேவி தெரிவித்தார். ஆனால் அவர் டத்தை அடுத்த ஒலிம்பிக்கில் சிறப்பாக விளையாட இந்த வாள் தேவை என கூறி அதனை தனக்கே திரும்ப கொடுத்த பவானி தேவி கூறினார். மேலும் அடுத்த ஒலிம்பிக்கில் சிறப்பாக விளையாட தேவையான உதவிகளை தமிழக அரசு செய்வதாக முதல்வர் நமிக்கை அளித்தார் என பவானி தேவி கூறினார்.

அதன் பின்னர் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்களையும் சந்தித்ததாகவும் அவர் தெரிவித்தார். பவானி தேவி மின்சாரத்துறையில் வேலை செய்வது பற்றி முதல்வர் கேட்டறிந்தாக பவானி தேவி தெரிவித்தார். இதனை தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் அவர்களை சந்திக்க இருப்பதாக வர கூறினார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெரிய அளவில் உதவியதாக பவானி தேவி தெரிவித்தார்.

இதன் காரணமாகவே வெளிநாடுகளில் பல்வேறு பயிற்சிகள் மேற்கொண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்க முடிந்தது எனவும், இது போன்ற உதவிகள் மேலும் தொடரும் என நம்புவதாக அவர் கூறினார். மேலும் நாட்டிற்காக பல பதக்கங்கள் பெற்று தருவேன் என பவானி தேவி கூறினார். ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுக்கு அரசு வேளையில் பதவி உயர்வு என்பது இருக்கும், முதன்முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கும் பட்சத்தில் சில முக்கிய பதவிகள் கொடுக்கப்படும். அதனை எதிர்பார்த்திருப்பதாக பவானி தேவி தெரிவித்தார்.

Related Stories:

>