நவ்லாக்கில் முட்புதர்கள் சூழ்ந்து குடிமகன்களின் கூடாரமாக மாறிய பயணிகள் நிழற்குடை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அடுத்த தெங்கால் சாலையில் நவ்லாக் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தை அப்பகுதி மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பஸ் நிறுத்தத்தில் பயணிகள் பயன்பாட்டிற்காக நிழற்குடை அமைக்கப்பட்டது. இந்நிலையில், பயணிகள் நிழற்குடை முட்புதர்கள் சூழ்ந்து பயணிகள் பயன்படுத்த முடியாத வகையில் உள்ளது. இதனால், பஸ் நிறுத்த பயணிகள் நிழற்கூடம் குடிமகன்கள் கூடாரமாக மாறி வருகிறது.

தினமும் மது குடிக்கும் குடிமகன்கள் பாட்டில்கள் பிளாஸ்டிக் டம்ளர்கள், கூல்டிரிங்க்ஸ் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்களை அங்கேய வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குடிமகன்கள் குடித்துவிட்டு பஸ் நிறுத்தத்தில் குடிபோதையில் தகராறு செய்வதால் பஸ் ஏற காத்திருக்கும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.   எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நிழற்குடையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும், குடிமகன்கள் பஸ் நிறுத்தத்தில் மது அருந்துவது உள்ளிட்ட செயல்களில் தடுக்க போலீசார் ரோந்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: