குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகையை முன்னிட்டு உதகையில் 3 அடுக்கு பாதுகாப்பு: 1200 காவலர்கள் பாதுகாப்பு பணியில் தீவிரம்

உதகை: நேற்று சென்னையில் நடைபெற்ற தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழா மற்றும்

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் திருஉருவப்படம் திறப்பு விழா நிகழ்ச்சிகளில் இந்திய குடியரசு தலைவர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார். அதனை தொடர்ந்து இன்று காலை சென்னையில் இருந்த்து கோவை புறப்பட்டு வருகிறார்.

தனி விமானம் மூலமாக வரும் அவர், கோவையில் இருக்க கூடிய சூலூர் படைத்தளத்தில் இறங்குகிறார். பின்னர் அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலமாக உதகை செல்கிறார். அங்கு தாவிரவியல் பூங்கா அருகே இருக்க கூடிய ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். இன்று இரவு அங்கு தாங்கும் குடியரசு தலைவர் நாளை காலை 10.30 மணி அளவில் குன்னூர் வெலிங்டன் ராணுவமையத்தில் நடைபெறக்கூடிய கோடி மாற்று நிகழ்ச்சி மற்றும் பட்டமளிப்பு விழாவில் கலந்தது கொள்கிறார்.

அதனை தொடர்ந்து மீண்டும் அவர் உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்குகிறார், 5-ம் தேதி உகையில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு செல்வதாகவும், மேலும் அங்குள்ள சில விவசாயிகளை சந்தித்தது அவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் வருகையை தொடர்ந்து 2நாட்கள் பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்பட்டது.

இன்று மதியும் குடியரசுத்தலைவர் வருகையை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 1200 காவலர் களை கொண்டு 3 அடுக்கு பாதுகாப்பானது போடப்பட்டுள்ளது. இன்று மதியம் சரியாக 12.25 மணியளவில் குடியரசு தலைவர் உதகை செல்கிறார். அவர் வருகையை தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 3 நாட்கள் உதகையில் தாங்கும் குடியரசு தலைவர் 6-ம் தேதி கோவை சென்று அங்கிருந்து டெல்லி புறப்படுகிறார்.

Related Stories:

>