தண்டராம்பட்டு அருகே எஜமானருக்காக உயிர்விட்ட நாயின் நினைவாக கட்டிய நடுகல் கண்டெடுப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா, தானிப்பாடி அடுத்த தா.வேளூர் கிராமத்தில், மண்ணுக்கடியில் இரண்டு துண்டுகளாக உடைந்து புதைந்து கிடந்த நாய் நடுகல்லை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.  இந்த அரியவகையான நடுகல் குறித்து, வரலாற்று ஆய்வு நடுவத்தினர் தெரிவித்ததாவது: பன்றியின் வாயை நாய் கவ்வியவாறு இந்த கற்சிற்பம் அமைந்துள்ளது. நடுகல்லில் செதுக்கப்பட்டுள்ள நாய்,  தன் எஜமானருடன் வேட்டைக்கு செல்லும்போது காட்டு பன்றியுடன் சண்டையிட்டு, பன்றியுடன் தானும் இறந்திருக்கலாம் என தெரிகிறது. அதன் நினைவாக அந்த நாயின் எஜமானரால் இந்த நடுகல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டிருக்கலாம் என்றனர்.

Related Stories: