எல்ஐசி நிர்வாக இயக்குநராக மினி இபே பொறுப்பேற்பு

மும்பை: எல்ஐசி நிர்வாக இயக்குநராக, மினி இபே பொறுப்பேற்றுள்ளார். மினி இபே,  ஆந்திர பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் முதுநிலை படிப்பு படித்தவர். 1986ம் ஆண்டு எல்ஐசியில்  பணியில் சேர்ந்தார். இந்த நிறுவனத்தில் இவருக்கு அதிக பணி அனுபவம் உண்டு. நிர்வாக இயக்குநராக பதவியேற்பதற்கு முன்பு, எல்ஐசி சட்டத்துறையின் செயல் இயக்குநராக பதவி வகித்தார்.  இந்த நிறுவனத்தின் மண்டல மேலாளர் பொறுப்பில் முதன்  முதலாக பொறுப்பேற்ற பெண் அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 மேலும், சர்வதேச ஆபரேஷன்ஸ் செயல் இயக்குநர், எல்ஐசி ஹவுசிங் பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி உட்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்து, எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் வளர்ச்சியை, லாபம் வருவாய் அதிகரிக்கச் செய்து புதிய உயரத்தை நோக்கி இட்டுச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: