ஜார்க்கண்ட் நீதிபதி கொலை: 243 பேரை காவலில் வைத்து விசாரணை

தன்பாத்: ஜார்க்கண்ட் மாநிலத்தின் தன்பாத் மாவட்டத்தை சேர்ந்தவர் நீதிபதி உத்தம் ஆனந்த். இவர் கடந்த புதனன்று காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது ஆட்டோ மோதி உயிரிழந்தார். சிசிடிவி பதிவுகளை வைத்து போலீசார் விசாரித்த போது, நீதிபதி மீது வேண்டுமென்றே ஆட்டோ மோதிவிட்டு தப்பிச்சென்றது தெரிந்தது. எனவே திட்டமிட்டு அவர் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வழக்கு தொடர்பாக விசாரணை செய்வதற்காக ஜார்க்கண்ட் அரசு சிறப்பு குழுவை அமைத்துள்ளது.

சிறப்பு குழுவினர் மாவட்டத்தில் உள்ள 53 ஓட்டல்களில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 17 பேர் கைது செய்யப்பட்டனர். பல்வேறு காவல்நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் சந்தேகத்தின்பேரில் 243 பேர் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். விபத்து ஏற்படுத்தியது ஆட்டோ ரிக்‌ஷா என்பதால் முறைகேடாக ஆவணங்கள் வைத்திருந்த 250 ஆட்டோ ரிக்‌ஷாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: