தமிழகத்தில் உள்ள கோவில்களில் அடுத்த வாரம் முதல் தமிழில் அர்ச்சனை நடைபெறும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி..!

சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில்களில் அடுத்த வாரம் முதல் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்தபோது அறிவித்த வாக்குறுதிகளில் கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடத்தப்படும் என்ற வாக்குறுதியும் ஒன்று. அதன்பேரில் தமிழகம் முழுவதும் கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர் பாபு முன்னதாக தெரிவித்திருந்தார்.

சென்னையில் பிராட்வேயில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார் அதில், அவர் கூறியதாவது: இந்நிலையில் தற்போது பேசியுள்ள அமைச்சர் சேகர் பாபு “தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெற உள்ளது. முதற்கட்டமாக சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் புதன் அல்லது வியாழக்கிழமை தமிழில் அர்ச்சனை நடைபெறும்” என கூறியுள்ளார்.

மேலும் ”அன்னை தமிழில் அர்ச்சனை” என்று பெயர் பலகை வைக்கப்பட்டு அர்ச்சகரின் பெயர் மற்றும் முகவரி குறிப்பிடவும் திட்டமிள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், 1,000 பேருக்கு 14 அத்தியாவசிய பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்.பி.தயாநிதிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 47 கோவில்களை தேர்வு செய்து அன்னை தமிழில் அர்ச்சனை என அறிவிப்பு பலகை வைக்கப்படும். தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் பெயர், தொலைபேசி எண் ஆகியவை பலகையில் எழுதி வைக்கப்படும், முதலில் பெரிய கோவில்களில் தமிழ் அர்ச்சனை அறிமுகம் செய்யப்பட்டு பிறகு சிறிய கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: