மாயனூர் காவிரி ஆற்றையொட்டிய வாய்க்கால், பாலங்கள் சீரமைக்கும் பணி தீவிரம்

கரூர்: கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றுப்பகுதியை ஒட்டியுள்ள வாய்க்கால் பாலங்கள் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டம் மாயனூர் வழியாக திருச்சி நோக்கி செல்லும் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த பகுதியில் இருந்து தென்கரை மற்றும் கட்டளை மேட்டு வாய்க்கால் போன்ற பல்வேறு வாய்க்கால்கள் உள்ளன. மேலும், இதே பகுதியில் அம்மா பூங்கா போன்றவையும் உள்ளன. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஆடி 18 சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் ஆடி 18ம் நாளில், பொதுமக்கள் குடும்பத்துடன், சுற்றுலா ஸ்தலம் மற்றும் ஆற்றுப்பகுதிகளுக்கு சென்று ஒரு நாளை கொண்டாடி வருவார்கள். அந்த வகையில் ஆடி 18 அன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் மாயனூர் பகுதிக்கு வந்து, குளித்து உணவருந்தி செல்வது வழக்கம். அதன்படி, ஒரு சில நாட்களில் ஆடி 18 வரவுள்ளது. இதனை முன்னிட்டு கரூர் மாயனூர் வழியாக செல்லும் வாய்க்கால் பாலங்கள் அனைத்தும் மக்களை கவரும் வகையில் வர்ணம் பூசி புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Related Stories: