பட்டாசு ஆலை பாதுகாப்பு குறித்து ஓய்வு நீதிபதி குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

மதுரை: ராஜசேகரன் என்பவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஸ்ரீமாரியம்மன் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் பலியாகினர். விதிமீறலில் உள்ள பட்டாசு ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி எஸ்.ஆனந்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. பஞ்சாப் - ஹரியானா ஐகோர்ட் ஓய்வு நீதிபதி கண்ணன் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைத்துள்ளது. இக்குழு பட்டாசு ஆலை பாதுகாப்பு அம்சங்கள், விபத்தை தவிர்ப்பது, நிவாரணம் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும் என கூறப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, மனுவை முடித்து வைத்தது.

Related Stories: