ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து: நிலஅளவை துறை ஆவணங்கள் தீ விபத்தில் எரிந்தன

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகத்தில் 2வது தளத்தில் நில அளவைத்துறை இயங்கி வருகிறது. இந்த நில அளவை துறையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து குறித்து இன்று காலை பணிக்கு வந்த ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளனர். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்துள்ளனர். இந்த தீ விபத்தில் நில அளவை துறையில் இருந்த ஆவணங்கள் மற்றும் கணினிகள் எரிந்து நாசமாகின.

இதுகுறித்து தற்போது கேணிக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்று விசாரணை நடைபெறுகிறது. இந்த நில அளவை துறையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆவணங்கள் இங்கு அதிகளவில் உள்ளது. இந்த தீ விபத்தில் அதிகமான ஆவணங்கள் எரிந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிந்த ஆவணங்கள் குறித்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்து ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>