திண்டுக்கல் மாவட்டத்தில் காவலர் உடல் தகுதித்தேர்வு துவங்கியது

திண்டுக்கல் : தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலைக்காவலர், சிறைத்துறை, தீயணைப்புத்துறை காவலர் காலிப்பணியிடங்களுக்கு எழுத்து தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு முதல் கட்ட உடல் தகுதித்தேர்வு நேற்று (ஜூலை 26) துவங்கி ஆக.3 வரை நடைபெற உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை எழுத்து தேர்வில் தகுதி பெற்ற 2,806 ஆண், 886 பெண் என மொத்தமாக 3,692 பேர் பங்கேற்க திண்டுக்கல் சீலப்பாடி மைதானத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்களின் அழைப்பு கடிதத்தில் கொடுக்கப்பட்டுள்ள தேதி, நேரத்திற்கு தவறாமல் தேர்வு மைதானத்திற்கு வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதோடு கொரோனா பரிசோதனை சான்றிதழ், தடுப்பு வழிமுறைகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டிருந்தது. முதல் நாளான நேற்று 500 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. காலை 6 முதல் 9 மணி வரை 300 பேரும், 9 மணிக்கு மேல் 200 பேர் என பிரித்து அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியுடன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது. இதில் வெற்றி பெற்றோர், அடுத்த சுற்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தேர்வினை டிஐஜி விஜயகுமாரி, எஸ்பி ரவளிப்பிரியா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

Related Stories: