சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப்பணம் பற்றிய அதிகாரப்பூர்வ மதிப்பீடு எதுவும் இல்லை!: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்..!!

டெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப்பணம் பற்றிய  அதிகாரப்பூர்வ மதிப்பீடு எதுவும் இல்லை என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை திரும்ப கொண்டு வருவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். கருப்புப்பண தடை சட்டத்தின் கீழ் 107 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதுவரை 8,216 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆனால் சுவிஸ் வங்கிகளில் எவ்வளவு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரப்பூர்வ மதிப்பீடு எதுவும் ஒன்றிய அரசிடம் இல்லை என்றும் பங்கஜ் சவுத்ரி குறிப்பிட்டார். முன்னதாக மாநிலங்களவையில் ஒன்றிய நிதித்துறை இணைஅமைச்சர் பங்கஜ் சவுத்ரி பேசியதாவது, இந்தியா, சுவிட்சர்லாந்து இடையிலான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தப்படி நிதி சார்ந்த தகவல்களை இரு நாடுகளும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்கின்றன.

சமீபத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் டிபாசிட் செய்துள்ளதாக, ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த டிபாசிட், கறுப்பு பணம் அல்ல என்றும் ஊடகங்கள் தெரிவித்திருந்தன. இது குறித்து சுவிஸ் தேசிய வங்கி, சமீபத்தில் மத்திய அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது. அதில், தேசிய வங்கியின் புள்ளிவிபரங்கள் ஒட்டுமொத்த சுவிஸ் வங்கித் துறையின் ஆண்டு நிதிநிலை அறிக்கையை பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

Related Stories: