நாளுக்கு நாள் மாற்றம் காணும் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.36,160க்கு விற்பனை..! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.36,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.4.520 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசு அதிகரித்து ரூ.72.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை நாளுக்கு நாள் மாறிக் கொண்டே தான் இருக்கிறது. இன்று அதிகமானோர் தங்கத்தில் தான் முதலீடு செய்கின்றனர். அந்த வகையில், தங்க விலை ஏற்படும் ஏற்றம், இறக்கத்தை பொறுத்தவரையில்,  தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் உற்று கவனிப்பதுண்டு.

தங்கம் விலை ஒரு மாதத்துக்கும் மேலாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த 21ம் தேதி கிராமுக்கு 14 குறைந்து ஒரு கிராம் 4,530க்கும், சவரனுக்கு 112 குறைந்து ஒரு சவரன் 36,240க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.36,160-க்கு விற்பனையாகிறது. மேலும், ஒரு கிராமுக்கு ரூ.10 அதிகரித்து, ரூ.4,520-க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 10  அதிகரித்து ரூ.72,10-க்கு விற்பனையாகிறது.

Related Stories:

>